உலகின் மிக வயதான பெண் ரயில் ஓட்டுநராக அமெரிக்காவை சேர்ந்த 81 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் இந்த மூதாட்டி, அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
1995ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன், தற்போதுவரை ஓய்வின்றி சுறுசுறுப்பாக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
இவரது பெயரை, இவரின் சக ஊழியர்கள், கின்னஸ் சாதனைக்கு விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன்.
தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் கூறுகையில், “இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
https://x.com/GWR/status/1801272957395750950