3,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணை தளவாடங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தைவானை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாகக் கருதிவரும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவை வரவேற்றுள்ள தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே, இராணுவ தளவாட கொள்முதல் மூலமும் தங்கள் சொந்த முயற்சி மூலமும் தைவானின் இராணுவ வலிமையை தொடா்ந்து மேம்படுத்தவிருப்பதாகத் தெரிவித்தாா்.
இந்த ஆயுத விற்பனையால் பிராந்தியத்தில் இராணுவச் சமநிலை பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.