ஒன்பது வயதுடைய செஸ் வீராங்கனை ஒருவர், சர்வதேச அளவில் எந்தவொரு விளையாட்டிலும் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளையவர் என்ற வரலாற்றைப் படைக்க உள்ளார்.
வடமேற்கு இலண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா சிவானந்தன், இந்த ஆண்டு இறுதியில் ஹங்கேரியில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் இணைய உள்ளார்.
செப்டெம்பர் மாதம் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு வடமேற்கு இலண்டனில் உள்ள ஹாரோவை சேர்ந்த போதனா சிவானந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணியில் உள்ள இரண்டாவது இளைய வீரரான 23 வயதான லான் யாவோவை விட போதனா சிவானந்தன் கிட்டத்தட்ட 15 வயது இளையவர்.
அணியின் மற்ற மூன்று உறுப்பினர்களும் 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
2015 இல் பிறந்த போதனா சிவானந்தன், கொவிட் காலத்தின் போது செஸ் விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளார்.
கடந்த டிசெம்பரில், அப்போதைய எட்டு வயது சிறுமி ஒரு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் சிறந்த பெண் வீராங்கனையாகப் பெயரிடப்பட்டார், அதன் மூலம் அவர் பல கிராண்ட்மாஸ்டர்களை விஞ்சினார்.
2022 ஆம் ஆண்டில் கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்று 25 ஆண்டுகளில் இங்கிலாந்தின் முதல் உலக இளைஞர் சாம்பியனானார் போதானா.
அவர் தனது வயதினருக்கான உலகின் சிறந்தவர்களில் ஒருவர் மற்றும் செஸ் உலகின் எதிர்கால நட்சத்திரமாகக் கருதப்படுகிறார்.