செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா புதிய நாணயத் தாளை அறிமுகப்படுத்திய ஜப்பான்!

புதிய நாணயத் தாளை அறிமுகப்படுத்திய ஜப்பான்!

0 minutes read

ஜப்பான் புதிய நாணயத் தாளை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த நாணயத் தாள்களின் வடிவமைப்பை அது மாற்றியுள்ளது.

அதாவது போலி நாணயத் தாள்களை அடையாளம் காணும் அம்சங்களும் வரலாற்றுச் சாதனையாளர்களின் படங்களும் புதிய நாணயத் தாளில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், அதன் பின்புறத்தில் டோக்கியோ விமான நிலையம், wisteria மலர்கள், ஃபுஜி மலையின் பிரபல ஓவியம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

மேலும், வயதானோர் எளிதில் படிக்கும் வண்ணம் அனைத்தும் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த புதிய நாணயத் தாள், முதலில் வங்கிகளுக்கும் நிதி நிலையங்களுக்கும் கொடுக்கப்படும். அதேவேளை, பழைய நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். பஸ்ஸில் பயணம் செய்வதற்கு அவை தேவைப்படும் என உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

புதிய நாணயத் தாளை பாராட்டிப் பேசிய ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, மக்களுக்கு அவை பிடிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More