உக்ரேனின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இதற்காக, நேட்டோ கூட்டமைப்புடன் சேர்ந்து நடவடிக்கைகளைச் செயல்படுத்தவிருப்பதாக அவர் கூறினார்.
குறித்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது இவ்வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, உக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலை அமெரிக்கா சாடியுள்ளது. “கீவின் மிகப்பெரிய சிறார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். எந்த அளவுக்குக் கொடுமையாக நடந்துக்கொள்ளமுடியும் என்பதை ரஷ்யா நினைவூட்டியுள்ளது,” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
சிறார் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தேடல், மீட்புப் பணிகள் இன்னும் தொடர்கின்றன.
இதனையடுத்தே, உக்ரேனின் ஆகாய பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பைடன் தெரிவித்தார்.
இதேவேளை, உக்ரேனில் பொதுமக்கள் இருக்கும் இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்றும் தற்காப்புத் துறையைச் சார்ந்த இலக்குகள் மீதும் ஆகாயத் தளங்கள் மீதுமேம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.