அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உலக அளவில் பேசப்படும் விடயமாக மிறியுள்ளது.
இந்நிலையில், இந்தக் கொலை முயற்சியை மேற்கொண்ட இளைஞன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இளைஞன் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த 20 வயதுடைய தோமஸ் மேத்தியூ குரூக்ஸ் (Thomas Matthew Crooks) என்ற இளைஞனே, நேற்று (14 ) நடந்த பிரசாரத்தின்போது டிரம்பைப் படுகொலை செய்ய முயற்சி செய்ததாக நம்பப்படுகிறது.
அதேவேளை, குரூக்ஸ் அமைதியானவர், புத்திசாலி என்று பலரும் அவரை வர்ணிக்கின்றனர். சமூக ஊடகக் கணக்குகளில் அவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தவில்லை; அவருக்கு மனநல நோய் இருப்பதாகத் தகவல் இல்லை என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குரூக்ஸ் தனிநபராகச் செயல்பட்டார் என்றும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.
இந்த கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை. குரூக்ஸ் டிரம்பை ஏன் கொலை செய்ய முயற்சி செய்தார் என்ற கேள்விக்கான பதிலை அதிகாரிகள் தேடுகின்றனர்.