அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் துப்பாக்கிசூட்டிற்கு ஆளானது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அயோவா மாநிலக் கட்சித் தலைவர் Jeff Kaufmann, குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்பை அறிவித்துள்ளார்.
படுகொலை முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பிய இரண்டு நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அவரின் அரசியல் வாழ்வில் மற்றொரு உயர்வை குறிப்பதாக பார்க்கப்படுகிறது.