அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டபின், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைக் கைப்பற்றுவதில், 59 வயது துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் 106 நாள்களே உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது உறுதி என்று துணையதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்திருக்கிறார்.
தேர்தல் பிரசாரக் குழுவைச் சந்தித்த பின் அவர், Delaware நகரில் பிரசாரத் தலைமையகத்தில் இருந்து பேசிய அவர், “ஒரு சிலருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சுதந்திரமும் வாய்ப்புகளும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை” என்றார்.
மேலும், நவீன அமெரிக்க வரலாற்றில் நிகரற்ற ஜனாதிபதி ஜோ பைடன் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இதேவேளை, குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால் டிரம்ப், “ஜோ பைடனை விடவும் கமலா ஹாரிஸை இலகுவில் தோற்கடித்து விடலாம்” என தனது பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.