இந்தியாவின் தேசியப் பறவை மயில் (Peacock) ஆகும். மயில்களைப் பாதுகாக்க இந்தியாவில் கடுமையான சட்டங்கள் நடப்பில் உள்ளன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மயிலை கொன்று சமைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
அவர் மயில் கறி உண்பதைக் காட்டும் காணொளியை YouTubeஇல் பகிர்ந்தார். பின்னர் அவர் மயில் கறி வைத்தமை உறுதிசெய்யப்பட்டு, ஆகஸ்ட் 12ஆம் திகதி இளைஞனர் கைதானார்.
தற்போது வனவிலங்குச் சட்டத்தின்கீழ் 14 நாளுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எங்கிருந்து மயிலைப் பிடித்துக் கறி வைத்தார் என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் YouTubeஇல் அவர் பகிர்ந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் வீடியோவை பார்வையிட்ட இணையவாசிகள், இளைஞன் குறித்த விசனங்களை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக அவர் தேசிய அடையாளத்தை அவமதிப்பது போன்று செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.