பிரான்ஸ். பாரிஸ் நகரில் இன்று (29) முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான (உடல் குறைபாடு உள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி) டிக்கெட்டுகள் மும்முரமாக விற்கப்பட்டுள்ளன.
இதுவரை 2 மில்லியன் டிக்கெட்டுகளுக்கும் மேல் விற்றுள்ளதாகவும் அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் ஒரு மில்லியன் டிக்கெட்டுகள் விற்றதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
கடைசிப் போட்டி நடந்து முடியும்வரை நுழைவு டிக்கெட்டுகள் தொடர்ந்து விற்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
இன்னமும் சுமார் 500,000 நுழைவு டிக்கெட்டுகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அனைத்து நுழைவு டிக்கெட்டுகளையும் விற்றுமுடித்துவிட முடியும் என்று பாரிஸ் ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
இதுவரை ஆக அதிகமாக 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 97 சதவீத நுழைவு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. அப்போது மொத்தம் 2.7 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.