இவ்வாண்டின் இந்தியா கோடீஸ்வரர் பட்டியல் குறித்து ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை கௌதம் அதானி பிடித்துள்ளார்.
அதன்படி, கௌதம் அதானி ரூ.11.61 இலட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதல்இடம் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, முகேஷ் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
3ஆம் இடத்தை ரூ.3.14 லட்சம் கோடி ரூபாயுடன் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, சைரஸ் பூனாவாலா (ரூ.2.89 லட்சம் கோடி), திலிப் சங்க்வி (2.49 லட்சம் கோடி) ஆகியோர் 4 மற்றும் 5ஆம் இடங்களை பிடித்துள்ளனர்.
இதேபோல், இந்தியாவில் 1,539 பேரிடம் தலா ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 220 மடங்கு அதிகமாகும். இவர்களின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தப் பட்டியலில் முதல்முறையாக இந்தி நடிகர் ஷாருக்கான் நுழைந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடி ரூபாய் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.