மேற்கு இலண்டனில் தாயிடமிருந்து பிரிந்து காணாமல் போன 11 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து காணாமல் போன 11 வயது சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை ஹெய்ஸின் பவுண்ட்லேண்டில் தனது தாயிடமிருந்து பிரிந்த சிறுவனை அதிகாரிகள் அவசரமாக தேடத் தொடங்கினர்.
அத்துடன், சிறுவனை கண்டிருக்கக்கூடிய நபர்கள் அது தொடர்பில் தகவல்களை வழங்குவதனை ஊக்குவிப்பதற்காக பொலிஸார் X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தன.
இந்த நிலையில், புதன்கிழமை வெளியிட்டப்பட்ட ஒரு புதுப்பிப்பில், சிறுவன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக மெட் தெரிவித்துள்ளது.