உலகிலேயே மிகக் கடினமாகக் கருதப்படும் Programming எனப்படும் நிரலாக்கப் போட்டியில் இந்திய சிறுவன் தங்கம் சாதனை புரிந்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகஸ்தியா கோயெல் (Agastya Goel) என்ற சிறுவனே இவ்வாறு தங்கம் வெற்றுள்ளார் என Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.
எகிப்தில் நடந்த அனைத்துலகத் தகவலியல் போட்டியில் மொத்தம் 34 மாணவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.
அவர்களில் அகஸ்தியா கோயெல் 600க்கு 438.97 மதிப்பெண்களைப் பெற்று, போட்டியில் 4ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.
https://x.com/deedydas/status/1833170827229155573
சீனாவைச் சேர்ந்த காங்யாங் சோ முழு மதிப்பெண்களைப் பெற்று, முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அனைத்துலகத் தகவலியல் போட்டியில் அகஸ்தியா கோயெல் இரண்டாவது முறையாக தங்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.