இங்கிலாந்தில் தனது தாயின் மரணத்துக்கு காரணமானவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, எச்எம் சிறை பெர்வின் (HM Prison Berwyn) சிறையில் அடைக்கப்பட்ட மகனும் மரணித்துள்ளார்.
டேவிட் ஹோலியோக் (David Holyoak) எனும் 53 வயதுடைய நபரே, கடந்த 4ஆம் திகதி மரணித்துள்ளார் என அந்நாட்டு நீதி அமைச்சகம் (MoJ) தகவல் வெளியிட்டுள்ளது.
எனும், எவ்வாறு இந்த மரணம் நிகழ்ந்தது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
டேவிட் ஹோலியோக்கின் கடுமையான அலட்சியத்தால் அவரது தாயார் டோரதி மோர்கன் (Dorothy Morgan) படுகொலை செய்யப்பட்டதாக 02 ஆண்டுகள் மற்றும் 08 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
வைட்ஹேவன், கும்ப்ரியாவை (Whitehaven, Cumbria) சேர்ந்த 71 வயதான அவர், தனது வீட்டில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நீரிழப்புடன் காணப்பட்டார். பின்னர் 2021 பெப்ரவரி மாதம் வைத்தியசாலையில் இறந்தார். மோர்கனின் மரணம் அவரது கடுமையான உடல் மெலிந்த நிலை காரணமாக ஏற்பட்டதாக நோயியல் நிபுணர் கூறினார்.
இதனையடுத்து, அவரை சரிவர பராமரிக்காத மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்காத குற்றச்சாட்டுகளில் டோரதி மோர்கனின் கணவர் ராபர்ட் கிறிஸ்டோபர் (61 வயது) மற்றும் மகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுமார் 2 வருட சிறை தண்டணைக்குப் பின்னர் மகன் சிறையிலேயே மரணித்துள்ளார்.
டோரதி மோர்கனின் மரண விசாரணைகளின் போது, கைதுசெய்யப்பட்ட இருவருமே குற்றச்சாட்டுகளை மறுத்திருந்ததுடன், மருத்துவ உதவியை நாடக்கூடாது என்ற மோர்கனின் விருப்பத்தை தாங்கள் பின்பற்றியதாக சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.