லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 558ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோரில் 50 சிறுவர்கள், 94 பெண்கள் உள்ளடக்கம். அத்துடன், இத்தாக்குதலில் 2,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவினருக்கும் இடையே பூசல் தொடர்கிறது.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் நேற்று முன்தினம் (23) நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலே மிக மோசமான தாக்கதலாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா புழங்கும் இடங்களை விட்டு வெளியேறும்படி தென் லெபனான் மக்களுக்கு கைத்தொலைபேசியில் எச்சரிக்கைக் குறிப்பு அனுப்பியது இஸ்ரேலிய இராணுவம்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்தும் போரைப் போன்றது என்று லெபனான் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், இஸ்ரேலின் வட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை இத்தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.