சட்டவிரோதமான தகவல்களை வெளிநாட்டுத் தொழில்நுட்பத் தளங்கள் அகற்றவேண்டும் என்று ரஷ்யா பல ஆண்டுகளாக உத்தரவிட்டுள்ளது.
நிறுவனங்கள் அதற்கு இணங்காதபோது, அபராதம் விதிப்பதை ரஷ்யா வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில், இணையத்தில் உள்ள தகவல்களை அகற்ற அல்லது தடை செய்யத் தவறிய குற்றத்திற்காக Google நிறுவனம் மீதும் ரஷ்யா அபராதம் விதித்துள்ளது.
அத்துடன், அதே குற்றத்திற்காக Discord நிறுவனம் மீதும் ரஷ்யா அபராதம் விதித்துள்ளது.
Google நிறுவனம் சட்டவிரோதமான தகவல்களை அகற்றத் தவறியதால் அதற்கு 3.5 மில்லியன் ரூபள்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தடைப்பட்ட தகவல்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு Discord தளத்திற்கு 3.5 மில்லியன் ரூபள்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது.