இஸ்ரேலும் ஈரானும் அமைதியாக இருக்க வேண்டும் என உலகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தரைத் தாக்குதலைத் தொடங்கிய பின், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
ஈரான் நடத்திய தாக்குதலில் பெரிய சேதம் இல்லையென்றாலும் இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தினால் நொறுங்கும் அளவுக்குக் கடுமையான தாக்குதலை நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கிறது.
கடந்ா ஏப்ரல் மாதமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இப்போது நடந்திருப்பது இரண்டாவது நேரடித் தாக்குதல் ஆகும்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை ஈரானின் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளன.
போரின் விளிம்பில் இருக்கும் இரு நாடுகளும் அந்த நிலையிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.