இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகியன சுகாதாரத் தரவு ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்ற உடன்படிக்கை மேற்கொண்டுள்ளன.
இவ்விரு நாடுகளின் ஆய்வாளர்களும் இணைந்து சுகாதாரத் தரவு ஆராய்ச்சியில் புது இலக்குகளை எட்ட எதிர்பார்த்துள்ளனர்.
இங்கிலாந்து பயணித்துள்ள சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சுகாதாரத் தரவு ஆய்வு அமைப்பும் சிங்கப்பூரின் தேசிய ஆய்வு அறநிறுவனமும் இதில் கைகோர்த்துள்ளன.
மேலும், Agency for Science, Technology and Research நிறுவம், Nottingham பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்றத்தைக் கையாளும் அலுவலகம் போன்றவையும் அதில் இணைந்துள்ளன.
எல்லைகடந்த ஆராய்ச்சி, தரவுப் பரிமாற்றத்தில் சிறந்த நடைமுறைகளை உருவாக்குவது, கூடுதலானோரை உள்ளடக்கிய உலகளாவிய சுகாதார முறையை அமைப்பது போன்றவற்றில் மேற்படி உடன்படிக்கை கவனம் செலுத்துகிறது.