உணவு உண்ணும்போது பழங்களை வெட்டத் தான் பயன்படுத்தும் சிறிய கத்தியை, அறுவை சிகிச்சைக்காக வைத்தியர் ஒருவர் பயன்படுத்தியதாக BBC தகவல் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இந்த அறுவைச் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் சுத்தமான சிறிய கத்தியைக் (scalpel) கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அவ்வாறு செய்ததாக, மேற்படி வைத்தியர் தெரிவித்துள்ளார்.
குறித்த அறுவை சிகிச்சை அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வைத்தியர் செய்தது பெரும் தவறு என்று Sussex உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை குற்றஞ்சாட்டியுள்ளது.
சிகிச்சையில் நோயாளி உயிர் பிழைத்தார். ஆனால், அறுவைச் சிகிச்சை வைத்தியரின் செயல் அவரது சக ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வைத்தியரால் அறுவைச் சிகிச்சைக்குரிய கத்தியைத் தேட முடியவில்லை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
குறித்த வைத்தியர், கடந்த 2 மாதத்தில் மேற்கொண்ட சற்றுக் கடுமை குறைந்த அறுவை சிகிச்சைகளில் 3 நோயாளிகள் உயிரிழந்ததாகவும் BBC தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.