அண்மைக்காலமாக கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் தொடர் விரிசல் நிலை ஏற்பட்டு வருகின்றது.
இரு நாடுகளும் ஒன்று மற்றையதன் தூதுவர்களை தம் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளன.
கனடாவில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் விவகாரம் தொடர்பில் இரு நாட்டுக்கும் இடையிலான விரிசல் மோசமடைந்துள்ளது.
கனடாவில் உள்ள இந்தியத் தூதுவரும் ஐந்து ஊழியர்களும் கனடிய மக்களுக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ சாடியுள்ளார்.
கனடியக் காவல்துறை அதற்கான ஆதாரத்தை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்தியா, கனடாவின் இடைக்காலத் தூதுவர் உட்பட 5 ஊழியர்களை எதிர்வரும் சனிக்கிழமைக்குள் (19 ) நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.