அமெரிக்காவில் பிரபல விரை உணவு உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும், அமெரிக்காவின் கொலாராடோ மற்றும் நெப்ராஸ்கா உட்பட 10 மாநிலங்களில் பர்கர் சாப்பிட்ட 49 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
உணவகங்களில் விற்கப்படும் Quarter Pounder பர்கரில் மாட்டு இறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் E. coli பாக்டீரியா இருப்பதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக எந்த உட்பொருளில் பாக்டீரியா உள்ளது என்பது ஆராயப்படுகிறது. தற்போதைக்கு பாதிக்கப்பட்ட சில மாநிலங்களின் McDonald’s கிளைகளில் மாட்டு இறைச்சியும் வெங்காயத் துண்டுகளும் அகற்றப்பட்டுள்ளன. சில கிளைகளில் Quarter Pounder பர்கரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
E coli மனிதர்களின் குடல்களில் இயல்பாக இருக்கக்கூடியது. அது பொதுவாக உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. பாக்டீரியாவின் சில ரகங்கள் பேதி, வயிற்று வலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
பாதிக்கப்படுவோர் பொதுவாக 7 நாள்களுக்குள் குணமடைந்துவிடுவார்கள். அவர்களின் உடல்நலம் மோசமானால் வைத்தியசாலையில் சேர்க்கப்படும் நிலை ஏற்படலாம். பாதிக்கப்பட்டர்கள் மருத்துவரை நாடும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.