அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதி ஒக்டோபர் 31ஆம் திகதி கொண்டாடப்படும் ஹலோவீன் (Halloween) நிகழ்ச்சிக்காக இங்கிலாந்து மக்கள் தயாராகி வருகின்றனர்.
அயர்லாந்து பாரம்பரியத்திலிருந்து இது தொடங்கியது. Halloween கொண்டாட்டத்துக்கு தற்போது இங்கிலாந்தில் கூடுதல் வரவேற்பு உள்ளது.
திரும்பும் திசையெங்கும் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டுள்ள பூசணிகளில் உருவங்களை செதுக்கி மக்கள் அலங்கரித்து வருகின்றனர். சாத்தானுடன் சமரசம் செய்துகொண்ட கொல்லரைப் பற்றிய புராணமே பூசணியில் உருவம் செதுக்குவதற்கு அடிப்படை என்று நம்பப்படுகிறது.
ஹலோவீன் கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் மிரள வைக்கும் கதாபாத்திரங்கள். பயங்கரமாய் உடையணிந்த சிறுவர், சிறுமியர் வீடு வீடாகப் போய் இனிப்புகளைக் கேட்பது வழக்கம்.
அயர்லந்துக் குடியேறிகள் அந்த நாட்டுப்புறப் பழக்கத்தை அமெரிக்காவுக்குக் கொண்டுசென்றனர். பிறகு அது அமெரிக்கமயமாகி, அட்லாண்டிக் முழுதும் பரவியது. கனடாவிலும் Halloween மிகவும் பரபலம் அடைந்துள்ளது.