இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இருவரும், இன்று (23) சந்திக்கவிருக்கின்றனர்.
ரஷ்யாவில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டத்தில் 36 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி சி சின்பிங்கும் ரஷ்யா பயணித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இமயமலை எல்லையில் 2020ஆம் ஆண்டு சிறு மோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கசப்பு நிலவியது. அதை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக அவை கூறின.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவற்றோடு இந்தியாவும் சீனாவும் முரண்பாடு கொண்டிருக்கும் நேரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு வருகிறது.
இதேவேளை, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற சில நாடுகள் ‘பிரிக்ஸ்’ அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.