கிழக்கு இலண்டனில் இரண்டு பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 2.05 மணியளவில் கேனிங் டவுனில் உள்ள தோர்ன் குளோஸில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர், 25 மற்றும் 27 வயதுடைய இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் – சந்தேகத்திற்குரிய எதையும் கேட்டவர்கள் அல்லது பார்த்தவர்கள், அது குறித்து தெரிவிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்வதாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் இயன் வாலஸ் கூறினார்
இரண்டு ஆண்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கு யார் பொறுப்பு என்பதை நாங்கள் அடையாளம் காண்பது முக்கியம் என்றும், பொலிஸாருக்கு உதவக்கூடிய தகவல் தெரிந்தவர்கள் 101ஐ அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.