ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாயன்று பெய்த மழையால் வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதன் விளைவாக கார்கள் தெருக்களில் அடித்துச் செல்லப்பட்டன, ஒரு ரயில் தடம் புரண்டதுடன், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.
மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன், வலென்சியா பகுதியில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.