இங்கிலாந்தின் Kent பகுதியில் இருக்கும் வீட்டுக்கு வளர்ப்பு நாய் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தீ சம்பவத்தை அடுத்து Herbie என்று குறித்த நாயுடன் 12 வயதுச் சிறுவன் வெளியே ஓடித் தப்பித்துள்ளான். வீட்டிலுள்ள புகை எச்சரிக்கை ஒலியை அடுத்து சிறுவன் சாதூரியமாக செயற்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
சம்ப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இவ்வீட்டில் இருந்த பூனையை மீட்கும் நிலை ஏற்பட்டதாகவும் BBC தெரிவித்தது. இவ்வாறு மீட்கப்பட்ட பூனை, வைத்திய உதவிக்குப் பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டது.
Herbie எனும் வளர்ப்பு நாய் தற்செயலாக வீட்டில் இருந்த Toasterஐ இயக்கியதாக வீட்டில் தீ மூண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மூன்று ஆண்டுகளில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளால் 28 தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக Kent பகுதி தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவை தெரிவித்துள்ளன.