கிழக்கு லண்டனில் உள்ள பிரிஸ்பேன் (Brisbane) வீதில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நார்தாம்ப்டன்ஷையரின் கோர்பியை (Northamptonshire – Corby) சேர்ந்த ஹர்ஷிதா பிரெல்லா (Harshita Brella) என்ற 24 வயது யுவதியே கடந்த வியாழக்கிழமை (14) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
“ஹர்ஷிதாவுக்கு தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டதாக நாங்கள் நம்பினாலும், நாங்கள் தொடர் விவாரணைகளை முன்னெடுத்து வருகிறோம்” எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அவளுக்குத் தெரிந்தவர்கள் தங்களுக்கு ஏதேனும் பொருத்தமான தகவல்களுடன் எங்களைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு பரவலான ஆபத்து எதுவும் இல்லை என்று நம்புவதாகவும் ஆனால், கோர்பியில் கூடுதல் ரோந்துகள் நடைபெறும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.