அதிகரித்த பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் காரணமாக இங்கிலாந்தின் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டன.
அதன்படி, வேல்ஸின் போவிஸ், ரெக்ஸ்ஹாம் மற்றும் பிளின்ட்ஷயர் பகுதிகளில் உள்ள சுமார் 130 பாடசலைகளும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் சுமார் 50 பாடசலைகளும் மூடப்பட்டுள்ளன.
வடக்கு இங்கிலாந்து, வடக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகள், மிட்லாண்ட்ஸ் மற்றும் வட,கிழக்கு வேல்ஸ் ஆகியவற்றில் பனி மற்றும் பனிப்பொழிவுக்கான மூன்று மஞ்சள் எச்சரிக்கைகள் தற்போது உள்ளன.
இங்கிலாந்தின் வடகிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
பனிப்பொழிவு ரயில் சேவைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதி கடந்த குளிர்காலத்தில் விட ஒரே இரவில் மிகக் குளிரான வெப்பநிலையை அனுபவித்துள்ளது. ஹைலேண்ட்ஸில் உள்ள துல்லோச் பாலத்தில் மைனஸ் 7.8C பதிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகள் மழை, பனி மற்றும் பனிப்பொழிவை காணும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.