பிரேஸில் நாட்டில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை மோடி சந்தித்து பேசினார். நோர்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரானையும் அவர் சந்தித்துப் பேசினார்.
மேலும், இந்தோனேசியாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோவையும் மோடி சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்து கொண்ட முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
அதேவேளை, பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
காலநிலை உடன்பாடு
குறித்த G20 நாடுகளின் தலைவர்கள் காலநிலை உடன்பாட்டில் எந்த ஓர் இணக்கத்தையும் எட்டவில்லை என தெரியவருகிறது.
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நிதியை பல பில்லியன் டொலரிலிருந்து பல டிரில்லியன் டொலருக்கு அதிகரிக்க வேண்டும் என்று G20 தலைவர்கள் கூறினர்.
ஆனால், அந்த நிதி எப்படி, எங்கிருந்து கிடைக்கும் என்பது குறித்து அவர்கள் ஏதும் தகவல் வெளியிடவில்லை.