செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இசையமைப்பாளர் AR ரஹ்மான் – சைரா பானு விவாகரத்து செய்ய முடிவு; சர்ச்சையில் arrsairaabreakup Hashtag!

இசையமைப்பாளர் AR ரஹ்மான் – சைரா பானு விவாகரத்து செய்ய முடிவு; சர்ச்சையில் arrsairaabreakup Hashtag!

1 minutes read

புகழ்பெற்ற இசையமைப்பாளர் AR ரஹ்மானும் அவருடைய மனைவி சைரா பானுவும் விவாகரத்துச் செய்துகொள்ளவிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 1995இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் செய்து 29 ஆண்டு ஆகிறது. கத்திஜா மற்றும் ரஹிமா என்ற மகள்களும் அமீன் என்ற மகனும் இருக்கின்றனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சிரமங்களும் மன உளைச்சலும் பிரிவுக்குக் காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டன.

திருமணத்திலிருந்து விலகும் முடிவு மிகுந்த வலியுடன் எடுக்கப்பட்டது என்று சைரா பானு குறிப்பிட்டார். இந்தக் கடிமான காலக்கட்டத்தைக் கடக்க மக்கள் தங்களுக்குத் தேவையான தனிமையைக் கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

arrsairaabreakup hashtag தேவையா?

இதேவேளை, இசையமைப்பாளர் AR ரஹ்மான், தமது விவாகரத்து அறிவிப்பை X தளத்தில் பதிவிட்டார். அவருடைய பதிவின் முடிவில் #arrsairaabreakup என்ற Hashtag இடப்பட்டுள்ளது.

அதை இணையவாசிகள் பலர் குறைகூறி வருகின்றனர். தனிமை தேவைப்படும் இவ்வேளையில் hashtag உருவாக்குவது சரியல்ல என்று விமர்ச்சிக்கின்றனர்.

எனினும், AR இன் X தளத்தை நிர்வகிப்பவர் இதைச் செய்தாரா என்று இணையவாசிகள் பலர் வினவுகின்றனர்.

arrsairaabreakup

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More