அமெரிக்கா – விஸ்கோன்சின் மாநிலத் தலைநகர் மெடிசனில் உள்ள Abundant Life Christian பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுமி தன் உயிரையும் மாய்த்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 06 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவர் அங்கு பயின்ற மாணவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த மாணவி நடத்தியதாகக் கூறப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்தவர்களில் ஒருவர் மாணவர். இன்னொருவர் ஆசிரியர் ஆவார்.
காயமடைந்த 6 மாணவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சந்தேகநபரின் குடும்பத்தினர் பொலிஸ் விசாரணையில் உதவி வருகின்றனர்.
தகவலறிந்து பொலிஸார் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பே துப்பாக்கியால் சுட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிறுமியும் உயிரிழந்ததாக தெரிகிறது.
அதிகாரிகள் எவரும் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல் இல்லை.