சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.
அதன்படி, சுமார் 63 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை சிரியாவுக்கு இங்கிலாந்து வழங்கவுள்ளது.
அத்துடன், அயல் நாடுகளான லெபனானிலும் ஜோர்தானிலும் வசிக்கும் சிரியா மக்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி தெரிவிக்கையில், இந்த நிதி பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் ஊடாக அனுப்பப்படும் என்றார்.
சிரியாவின் எதிர்கால அரசாங்கம் சிறப்பாகஅமைய அரசதந்திர உதவிகளையும் வழங்கவிருப்பதாகவும் அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
சிரியாவின் கடந்த ஜனாதிபதி அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த கிளர்ச்சிக் குழுவான ஹயட் தஹ்ரீர் அல்-ஷாமுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த அமைப்பு, அல்- கயீடாவிலிருந்து பிரிந்து உருவானது. அல்-கயீடா இங்கிலாந்தில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அதனால் சிரியாவின் அமைப்பை அதன் செயல்களைக் கொண்டு, எடைபோடவிருப்பதாக எலாமி தெரிவித்தார்.
இதேவேளை, 13 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரால் மில்லியன் கணக்கான சிரியா மக்கள் இன்னமும் முகாம்களில் வசிக்கின்றனர். சிரியாவின் பெரும்பகுதி சீர்குலைந்துவிட்டது. பலர் நகரங்களைவிட்டு வெளியேறிவிட்டனர். சிரியா நாட்டின் மறு நிர்மாணம் சுலபமல்ல என்கின்றனர் அந்நாட்டு நிபுணர்கள்.