கிழக்கு லண்டன் பகுதியில் இரட்டை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக 16 வயது சிறுவன், இளைஞன் மற்றும் ஒரு பெண்ணை, புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.
ஒக்டோபர் 26 அன்று அதிகாலை 2 மணிக்குப் பிறகு கேனிங் டவுனில் ரோஜர்ஸ் வீதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள தோர்ன் குளோஸுக்கு அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்களும் அழைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 25 மற்றும் 27 வயதுடைய இருவரைக் மீட்பதற்காக அவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலையில், பெருநகர காவல்துறையின் சிறப்பு குற்றவியல் அதிகாரிகள் கிழக்கு இலண்டன் சந்தேக நபர்களை கைதுசெய்தனர்.
கொலை முயற்சி, கொலைக்கு சதி செய்தமை மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கி வைத்திருந்தமை ஆகிய சந்தேகத்தின் பேரில் 16 மற்றும் 18 வயதுடைய இரு ஆண்களும், 27 வயதுடைய பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை, ஒக்டோபர் 26 அன்று என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதை உறுதிப்படுத்த விசாரணைக்கு உதவும்” என, டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டேவிட் ஹிக்ஃபோர்ட் கூறினார்.