அனுபவம் வாய்ந்த தெற்கு லண்டன் தாதி ஒருவர் தனது “பாலியல்” படங்களை சக இளைய ஊழியர்களிடம் காட்டிய சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
டிசம்பர் 2, 2021 அன்று செயின்ட் நிக்கோலஸ் தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் போது, தனது படங்களை சக ஊழியர்களுக்குக் காட்டியுள்ளார்.
“தடுப்பூசி மையத்தில் பணியாளர்கள் பகுதியில் பேசிக் கொண்டிருந்த சக இளைய ஊழியர்கள் இருவரையும் அணுகி, ‘நீங்கள் போட்டோவை பார்க்க விரும்புகிறீர்களா’ என்று கேட்டார்” என்று வழக்கை விவரிக்கும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இருவரும் ‘நன்றி இல்லை’ என்று பதிலளித்தனர். ஆனால் ,அவர் தனது அலைபேசியில் உள்ள புகைப்படங்களைக் காட்டத் தொடங்கியதுடன், சுமார் மூன்று புகைப்படங்கள் அதில் இருந்துள்ளன” என கூறப்படுகின்றது.
அத்துடன், குறித்த சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ரோஹாம்ப்டன் தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் போது அவர் ஒரு நோயாளியிடம் ஆக்ரோஷமாக பேசி, அவர்களுக்கு தடுப்பூசியை வழங்க மறுத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோயாளி தனது வருங்கால கணவருடன் நவம்பர் 30, 2021 அன்று தடுப்பூசி மையத்திற்குச் சென்று இரண்டாவது கோவிட் தடுப்பூசியை பெறுவதற்கு வழக்கமான டோஸ்களுக்கு இடையில் தேவைப்படும் நேரத்திற்கு முன் சென்ற நிலையில், அவரிடம் ஆக்ரோஷமான முறையில் நடந்துகொண்டதாக குறித்த தாதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே 18 மாதங்களுக்கு இடைக்கால பணி இடைநீக்க உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒன்பது மாதங்களுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், விசாரணை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவர் விரும்பவில்லை.