கிறிஸ்மஸ் தினத்தன்று Staffordshire கிராமத்தில் உள்ள வீடொன்றில் ஆண் உயிரிழந்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை மாலை சுமார் 03:25 மணியளவில் நார்டன் கேன்ஸில் உள்ள எல்ம் வீதியில், மாரடைப்பு ஏற்பட்ட 30 வயதுடைய ஒரு நபர் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் சிறிது நேரத்திற்குப் பிறகு இறந்துவிட்டார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கன்னாக் பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் காவலில் வைக்கப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
உயிரிழந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.