மெக்சிகோ நகரில் நடந்த நேரடிப் பிரசார நடவடிக்கையின் போது பெண் மேயர் வேட்பாளரான யெசெனியா லாரா குட்டியரெஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலும் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி பிரசார நடிவடிக்கை Facebookஇல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மேயர் வேட்பாளர் யெசெனியா, மக்களைச் சந்தித்துப் பேசுவதையும் அவரைச் சுற்றி ஆதரவாளர்கள் பலர் இருப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது.
அப்போது, திடீரென சுமார் 20 துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தங்கள் எழுந்தன என்று CNN தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததை மெக்சிகோவின் ஜனாதிபதி கிளவ்டியா ஷேன்பாம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மெக்சிகோ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.