அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், நேற்று முன்தினம் (29) ஜார்ஜியாவிலுள்ள தமது இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 100ஆகும்.
அன்னாரின் இறுதிச் சடங்கு, எதிர்வரும் 9ஆம் திகதியன்று முழு அரச மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 7 முதல் 10 நாள் வரை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். முதலில் அவரது உடல் அவரது சொந்த ஊரிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, அட்லான்ட்டாவில் உள்ள கார்ட்டர் நிலையத்தில் வைக்கப்படும்.
ஜனவரி 6ஆம் திகதி உடல் தலைநகர் வாஷிங்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் வைக்கப்படும்.
ஆப்ரகாம் லின்கன் முதல் இறுதியாக ஜார்ஜ் W. புஷ் வரை மறைந்த அமெரிக்க ஜனாதிபதிகளின் உடல்கள் அங்கு வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்படுவதே வழக்கம்.
அவ்வாறே ஜனவரி 9ஆம் திகதியன்றும் கார்ட்டருக்கு வாஷிங்டன் தேசிய தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
இந்நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றவுள்ளார்.