உலகிலேயே மிகவும் வேகமாக பயணிக்கும் ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் புதிய ரயில் பயணிக்கவுள்ளது. இந்த ரயிலே உலகின் மிக வேகமான ரயில் என்று கூறப்படுகிறது.
CR450 ரயிலின் முன்மாதிரி நேற்று முன்தினம் (29) அறிமுகப்படுத்தப்பட்டது. ரயில் வேகமாகப் பயணித்தாலும் எரிபொருள் குறைவாகப் பயன்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அது பிரதிபலிப்பதாக சீனாவின் ரயில்வே அமைப்பு தெரிவித்தது. உலகின் மிக வேகமான ரயில்களில் சில ஏற்கெனவே சீனாவில்தான் உள்ளன.
ஷங்ஹாய் அனைத்துலக விமான நிலையத்தையும் நகரத்தையும் இணைக்கும் ரயில் அதிகபட்சம் மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
சீனா அதன் அதிகவேக ரயில்கள் நாட்டுக்கு அப்பால் செல்லவும் கனவு காண்கிறது.
அது அடுத்து தென்கிழக்காசிய நாடுகளை இணைக்கும் ரயில் சேவையை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது.