புத்தாண்டு தினத்தன்று நடந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
மக்கள் கூட்டத்தின் மீது வானம் மோதிய சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 42 வயது முன்னாள் இராணுவ வீரர் பல வாரங்களுக்கு அதனைத் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். அமைப்பால் அவர் தூண்டப்பட்டதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (6 ஜனவரி) நியூ ஆர்லியன்ஸுக்குச் செல்லவிருக்கிறார்.
இந்த நிலையில், நியூ ஆர்லியன்ஸ் நகரில் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகர மேயர் தெரிவித்துள்ளார்.