அண்மைக் காலமாக மக்களின் ஆதரவை இழந்துள்ள கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, விரைவில் பதவி விலகுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய மிதவாதக் கட்சி நாளை மறுநாள் (8 ஜனவரி) கூடுவதற்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்பதுடன், கட்சிக்குப் புதிய தலைவர் கிடைக்கும் வரை ட்ரூடோ தற்காலிகமாகப் பதவியில் நீடிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
2015இல் பதவிக்கு வந்த ட்ரூடோ மீது, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் முதலியவற்றால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.
கனடாவில் வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், ட்ரூடோ பதவி விலகினால் தேர்தல் விரைவாக நடத்தப்படும் சாத்தியம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.