இப்ஸ்விச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 1ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்னதாக, ஹாவ்தோர்ன் டிரைவ், இப்ஸ்விச்சில் உள்ள முகவரிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
அங்கு இறந்து கிடந்த 63 வயது நபர் இப்ஸ்விச்சைச் சேர்ந்த பில்லி என அழைக்கப்படும் வில்லியம் மெக்னிகோல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சனிக்கிழமையன்று உள்துறை அலுவலக பிரேத பரிசோதனையின் முதற்கட்ட முடிவுகள் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளன.
பல காயங்களால் அவரது மரணம் நிகழ்நதுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, முக்கிய புலனாய்வுக் குழு கொலை விசாரணைக்கு தலைமை தாங்குவதாகவும் சஃபோல்க் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடரும் நிலையில், குறித்த பகுதியில் அதிகரித்த பொலிஸாரின் பிரசன்னம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.