லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலையில் இருந்து தீவிரமாகப் பரவி வருகின்றது.
பலத்த காற்று தெற்கு கலிபோர்னியாவில் பாரிய தீயை தூண்டியதுடன், வீடுகளை தரைமட்டமாக்கி, வீதிகளை முடக்கியுள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் இருந்து குறைந்தது 30,000 பேர் வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.
பசிபிக் பாலிசேட்ஸில் ஏற்பட்ட தீ 10 ஏக்கரில் இருந்து 2,900 ஏக்கருக்கு மேல் ஒரு மணி நேரத்தில் பரவியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையானது, பணியில்லாத தீயணைப்பு வீரர்களிடமிருந்து கூடுதல் உதவிக்கான வேண்டுகோளை வெளியிட்டுள்ளது
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் குறைந்தது 200,000 பேர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பலத்த காற்று மற்றும் மின் தடை காரணமாக சில பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளன.
அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவாக கூட்டாட்சி பணத்தை பயன்படுத்த ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். அதாவது, அவர்கள் பெரிய தீ விபத்துகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய அதிக ஆபத்தில் உள்ளனர்.