இங்கிலாந்தில் கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக கடந்த டிசெம்பரில் பணவீக்கம் எதிர்பாராத விதமாக குறைந்தது.
டிசெம்பரில் முந்தைய மாதத்திலிருந்து 2.6% ஆக விலைகள் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மாதம் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ONS இன் தலைமைப் பொருளாதார நிபுணர் கிராண்ட் ஃபிட்ஸ்னர் கூறுகையில், கடந்த மாதம் ஹோட்டல் விலைகள் குறைந்ததுடன், புகையிலை விலையும் குறைந்ததுடன், இது ஒட்டுமொத்த பணவீக்கம் குறைவதற்கு ஒரு காரணியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.