அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டோனல்ட் டிரம்ப் (78 வயது), இது அமெரிக்காவுக்கு பொற்காலம் என்று அறிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டுப் போர்களை முடிவுக்குக்கொண்டு வருதல், அமெரிக்க எல்லைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.
உலக அளவில் அமெரிக்கா மீண்டும் மதிக்கப்படும் என்று அவர் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகைக்கு டிரம்ப்பையும் அவர் மனைவியையும் ஜோ பைடன் வரவேற்றார்.
பதவியேற்பு விழாவில் அமெரிக்க செல்வந்தனர் இலோன் மஸ்க், Meta நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க், Amazon நிறுவனர் ஜெஃப் பெஸொஸ் மற்றும் Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் டோனல்ட் டிரம்ப், பேச்சுரிமையை மீண்டும் நிலைநாட்டும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அந்த உத்தரவு மத்திய அரசாங்கத் தணிக்கையை முடிவுக்குக் கொண்டு வருகிறது.
இணையத் தளங்களில் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தியதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை டிரம்ப் சாடியிருந்தார்.
பைடனின் நிர்வாகம் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நெருக்கடி அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.