இங்கிலாந்தை தாக்கிய Éowyn புயல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Éowyn புயல் தாக்கத்தால் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்காட்லாந்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை அனைத்து ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் சிவப்பு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
96mph (155km/h) வேகத்தில் காற்று வீசுவதால் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு அயர்லாந்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. புயல் கட்டிடங்களை சேதப்படுத்தியதுடன், மரங்கள் பல வீழ்த்தமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சிவப்பு எச்சரிக்கைகளுடன், அடுத்த சில நாட்களில் இங்கிலாந்து முழுவதும் காற்று, மழை, பனி மற்றும் பனிக்கட்டிக்கான எச்சரிக்கைகள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன.