இங்கிலாந்து – Coventry நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு சுமார் 14 ஆண்டுகளாக தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவ்வாறு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமையை சம்பந்தப்பட்ட வைத்தியசாலையும் ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் குறித்து தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் வைத்தியசாலை கூறியுள்ளது.
அதேபோன்று மேலும் 12 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபரின் சட்டத்தரணி கூறியதாக BBC அறிக்கையிட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு உட்கொள்ளலாம் என்று இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் வழிகாட்டி சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கு மேல் அதாவது தொடர்ந்து 4 ஆண்டுகளாக அந்த மருந்தை உட்கொண்ட அவருக்கு உடல்சோர்வு, வயிற்று வலி, வாய்ப்புண் மற்றும் தலைசுற்றல் ஆகியவை ஏற்பட்டன.
அவருக்குச் சிகிச்சை அளித்து வந்த வைத்தியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பே குறித்த மருத்துவ தவறு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.