Clapham Common அருகே நடந்து சென்ற இளம் பெண்களைத் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 8 மற்றும் ஜனவரி 23 ஆகிய திகதிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன், அங்கு மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தெற்கு லண்டனில் நடந்த இந்த நிகழ்வுகளை “மிகவும் ஆபத்தானது” என்று விவரித்த மெட் பொலிஸ் அதிகாரி ஒருவர், மூன்று சிறுமிகளையும் பொலிஸாரை தொடர்பு கொண்டதற்காக பாராட்டினார்.
“நேற்று மாலை நாங்கள் 22 வயது இளைஞனைக் கைது செய்தோம். மேலும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.