கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன், அவருக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுவதால், தொடர் சிகிச்சை தேவை என மருத்துவமனை தெரிவித்துள்ளர்.
இதனால், போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்புகளால் போப் அவதிப்பட்டு வருவதுடன், திங்கட்கிழமை நடந்த பரிசோதனை முடிவில், அவருக்கு சுவாச குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளதாக வத்திகான் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி தெரிவித்துள்ளார்.
எனினும் போப் சில அன்றாட பணிகளை செய்து வருவதுடன், அவருடைய நிலைமை சீராக உள்ளது என்று தெரிவிக்கபட்டாலும், மார்ச் 5ஆம் திகதி சாம்பல் புதன் வரை அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு நிமோனியா பாதிப்புக்காக போப் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.