சீனாவின் ஏ.ஐ செயலியான டீப்சீக் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. அறிமுகமான சில வாரங்களுக்குள்ளேயே உலகளவில் இது மிகவும் பிரபலமானது.
தென்கொரியாவில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டீப்சீக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, தனியுரிமை கொள்கை, தேசிய பாதுகாப்பு போன்ற அச்சுறுத்தல்கள் உள்ளதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை டீப்சீக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆப்பிள் ஆப்ஸ்டோர் மற்றும் பிளேஸ்டோரில் இருந்து டீப் சீக் செயலி நீக்கப்பட்டது.
எனினும், ஏற்கனவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆஸ்திரேலியா, தாய்வான் ஆகிய நாடுகளிலும் டீப்சீக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.