ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் மாவட்டத்தின் குண்டேரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஓட்டோ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒரு ஓட்டோவுடன் மோதியதில், இருவர் உடனடியாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன், இந்த விபத்தில் மொத்தம் ஏழு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
தகவல் கிடைத்ததும், வட்ட ஆய்வாளர் ராஜு மற்றும் பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்காக அனந்தபூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.
சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.